• Homepage
  • >
  • செய்திகள்
  • >
  • பொய் வழக்கை ரத்து செய்து மாணவர், இளைஞர்களை விடுதலை செய்.

பொய் வழக்கை ரத்து செய்து மாணவர், இளைஞர்களை விடுதலை செய்.

  • by editor
  • 6 Months ago
  • 0

காட்டுமிராண்டித்தனமாக மாணவர்களை, இளைஞர்களை தாக்கிய பள்ளிக்கரனை காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம். பொய் வழக்கை ரத்து செய்து மாணவர், இளைஞர்களை விடுதலை செய்.
500, 1000 செல்லாது என்ற அறிவிப்பால் 100க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் வேலையை, கூலியை இழந்து வங்கிகள், ஏடிஎம் மையங்களின் வாசலில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். அரசின் திட்டமிடப்படாத அலட்சிய அறிவிப்பால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர். பணத்தட்டுபாட்டை சரிசெய்யக் கோரி போராடிய ளுகுஐ-னுலுகுஐ தோழர்களை கடுமையாகத் தாக்கிக் கைது செய்த காவல்துறையை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
50 நாட்களுக்குள் சரி செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து 50 நாட்கள் கடந்தும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. இதை கண்டித்து சென்னை மேடவாக்கம் ஏடிஎம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த இளைஞர்களை கடுமையாகத் தாக்கியதோடு சுரேஷ், கிருஷ்ணன், தாமு, திவாகர், சுபாஷ், கார்த்திக், அனிஷ், அழகேசன், அனிபா, ஜெயகுமார், பாலகிருஷ்ணன், செல்வகுமார், ஜெயவேல், சந்தீப் ஆகிய 14 பேரை கைது செய்தும் அவர்கள் மீது 147, 188, 341, 342, 336, 294ழு, 506/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.
காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டிப்பதோடு பொய்யாக புனையப்பட்ட வழக்கினை ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜா, கண்மூடித்தனமாக தாக்கிய ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் மணிகண்டன், மோகன்தாஸ், காவலர்கள் ராஜா, செந்தில் மற்றும் பள்ளிக்கரனை காவல்துறையினர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாநிலம் முழுவதும் னுலுகுஐ – ளுகுஐ இணைந்து போராட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கிறது.
சென்னையில் ஜனவரி 04 ஆம் தேதி பள்ளிக்கரனையில் காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டித்து எஸ்எப்ஐ-டிஒய்எப்ஐSF சார்பாக போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வடசென்னை, தென்சென்னை ஆகிய மாவட்டக்குழுக்கள் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை திரட்டிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
Previous «
Next »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *