• Homepage
  • >
  • செய்திகள்
  • >
  • கையெழுத்து இயக்கம் நடத்துவீர் – பல்கலைக்கழக மாணவர் மாநாடு அறைகூவல்

கையெழுத்து இயக்கம் நடத்துவீர் – பல்கலைக்கழக மாணவர் மாநாடு அறைகூவல்

  • by editor
  • 10 Months ago
  • 0

இந்திய மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழக மாணவர்களின் மாநில சிறப்பு மாநில மாநாடு செப்டம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சிதம்பரம் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது,

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

  • புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக செப்டம்பர் 21ஆம் தேதி அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் கையெழுத்து இயக்கத்தினை நடத்துவது
  • அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் இதர அரசு மாநில பல்கலைக்கழகங்களில் உள்ள கட்டணத்தையே நிர்ணயித்திட வலியுறுத்தல்
  • அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கிட வலியுறுத்தல்
  • திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடரும் நிர்வாகச் சீர்கேட்டை சரிசெய்திட வலியுறுத்தல்

 

  • மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற்றிட வலியுறுத்தல்

 

  • புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அடக்குமுறைக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு துணைநிற்போம்

 

  • மாணவர் பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற ஜே.என்.யூ. தோழர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், இந்த வெற்றியை அனைத்து கல்விநிலையங்களிலும் கொண்டாடிட அறைகூவல்

 

  • பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் காலி பணியிடங்களை நிரப்புவது,

 

  • ஆய்வு மாணவர்களுக்கான சிறப்பு உதவித்தொகைகளை அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் அமல்படுத்திட வலியுறுத்தல்

 

  • ஆய்வு மாணவர்களுக்கான சிறப்பு உதவித்தொகைகளை அதிகப்படுத்துவது,

 

  • பல்கலைக்கழக வளாகங்களில் மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்களை தடுத்திட உரிய குழுக்களை அமைத்து கண்காணித்தல்,
  • பல்கலைக்கழக வளாகங்களில் இந்துத்துவா கருத்துக்களை புகுத்த முயற்சிக்கும் மத்திய பிஜேபி அரசுககு கண்டனம்
  • அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர் பேரவை தேர்தல்களை நடத்துவது
  • facebook
  • googleplus
  • twitter
  • linkedin
  • linkedin
Previous «
Next »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *