தகுதி தேர்வை தாய்மொழியில் நடத்திட கோரி வலியுறுத்தல்.

தமிழகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள உதவி பேராசிரியர்களுக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதை இந்திய மாணவர் சங்கம் கண்டிக்கின்றது. மேலும் தாய்மொழியில் நடத்திட உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறது. மாநில அளவில் உதவி பேராசிரியர்களுக்கான தகுதி தேர்வு 6 மாதத்துக்கு ஒருமுறை நடத்திட வேண்டும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. 2013 ல் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் இத்தேர்வை

» Read more

நீட் தேர்வுக்கு எதிரான மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றம் – இந்திய மாணவர் சங்கம் வரவேற்பு

எம்.பி.பி.எஸ் – பி.டி.எஸ் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்விலிருந்து (நீட்) தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை இந்திய மாணவர் சங்கம் வரவேற்கிறது. தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் – பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் மருத்துவ இளநிலை முதுநிலை படிப்புகளுக்கு அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்கள் பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே சீரான நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு 1956

» Read more

பொய் வழக்கை ரத்து செய்து மாணவர், இளைஞர்களை விடுதலை செய்.

காட்டுமிராண்டித்தனமாக மாணவர்களை, இளைஞர்களை தாக்கிய பள்ளிக்கரனை காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம். பொய் வழக்கை ரத்து செய்து மாணவர், இளைஞர்களை விடுதலை செய். 500, 1000 செல்லாது என்ற அறிவிப்பால் 100க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் வேலையை, கூலியை இழந்து வங்கிகள், ஏடிஎம் மையங்களின் வாசலில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். அரசின் திட்டமிடப்படாத அலட்சிய அறிவிப்பால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர். பணத்தட்டுபாட்டை சரிசெய்யக் கோரி போராடிய ளுகுஐ-னுலுகுஐ தோழர்களை கடுமையாகத் தாக்கிக் கைது செய்த காவல்துறையை இந்திய மாணவர் சங்கம்

» Read more

கையெழுத்து இயக்கம் நடத்துவீர் – பல்கலைக்கழக மாணவர் மாநாடு அறைகூவல்

இந்திய மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழக மாணவர்களின் மாநில சிறப்பு மாநில மாநாடு செப்டம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சிதம்பரம் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக செப்டம்பர் 21ஆம் தேதி அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் கையெழுத்து இயக்கத்தினை நடத்துவது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் இதர அரசு மாநில பல்கலைக்கழகங்களில் உள்ள கட்டணத்தையே நிர்ணயித்திட வலியுறுத்தல் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கிட வலியுறுத்தல் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடரும் நிர்வாகச் சீர்கேட்டை சரிசெய்திட

» Read more

செப்டம்பர் 2 – அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து இந்திய தேசம் முழுவதும் செப்டம்பர் 2-ஆம் தேதி பொது வேலைநிறுத்தம் செய்திட அனைத்து தொழிற்சங்கங்களும் அறைகூவல் விடுத்துள்ளன. இந்த பொது வேலை நிறுத்தத்தில் இந்திய மாணவர் சங்கமும் பங்கேற்கிறது. இன்றைக்கு மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள பிஜேபி அரசு, கல்விநிலையங்களை காவிமயமாக்கிட தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சென்னை ஐஐடியில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் மீதான தடை, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா உள்ளிட்ட மாணவர்கள் மீதான அடக்குமுறை, அதை தொடர்ந்து ரோஹித் வெமுலாவின் மரணம், தில்லி ஜவஹர்லால்

» Read more